×

آل عمران

வசனம் 84

அல்-முக்தஸர்

قُلْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيْنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ ﴿٨٤﴾

தூதரே! நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, எங்களுக்கு ஏவப்பட்டவிடயத்தில் அவனுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். எங்கள்மீது இறக்கப்பட்ட வஹியின் மீதும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு மற்றும் யஅகூபின் பிள்ளைகளில் தூதராக அனுப்பப்பட்டவர்கள் ஆகியோருக்கு இறக்கப்பட்டவற்றின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். மூசாவுக்கும் ஈசாவுக்கும் மற்றும் தூதர்கள் அனைவருக்கும் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதங்கள், சான்றுகள் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம். அவர்களில் சிலர் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்தவர்கள்.”