அல்-முக்தஸர்
أَفَغَيْرَ دِينِ ٱللَّهِ يَبْغُونَ وَلَهُۥٓ أَسْلَمَ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ ﴿٨٣﴾
அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறிய இவர்கள் தனது அடியார்களுக்கு அவன் தெரிவு செய்த இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தையா விரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைப்போன்று விரும்பியோ நிராகரிப்பாளர்களைப்போன்று விரும்பாமலோ வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அவனுக்கே கட்டுப்பட்டுள்ளன. மறுமைநாளில் விசாரித்து, கூலி வழங்கப்படுதற்காக படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புவார்கள்.