அல்-முக்தஸர்
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ ﴿٧٦﴾
அவர்கள் கூறியது போலல்ல. மாறாக அது பாவமாகும். அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவர்கள், மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அமானிதத்தை ஒப்படைத்தவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் ஆகியவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை வழங்கிடுவான்.