அல்-முக்தஸர்
وَمِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍ يُؤَدِّهِۦٓ إِلَيْكَ وَمِنْهُم مَّنْ إِن تَأْمَنْهُ بِدِينَارٍ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَيْسَ عَلَيْنَا فِى ٱلْأُمِّيِّـۧنَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ ﴿٧٥﴾
வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெருங்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்திலும் அவர்களது செல்வத்தை அனுபவிப்பதிலும் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவற்றை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தவறான கூற்றும் எண்ணமும்தான். இவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டம் கூறுகிறோம் என அறிந்துகொண்டே இந்தப் பொய்யைக் கூறுகின்றனர்.