அல்-முக்தஸர்
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْقَصَصُ ٱلْحَقُّ ۚ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّا ٱللَّهُ ۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ﴿٦٢﴾
ஈசாவைக்குறித்து நாம் கூறிய விஷயங்கள் தான் சந்தேகமற்ற பொய்யற்ற உண்மையாகும். அல்லாஹ்வைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; அவன் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் படைப்பில் ஞானம்மிக்கவன்.