அல்-முக்தஸர்
فَمَنْ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ فَقُلْ تَعَالَوْا۟ نَدْعُ أَبْنَآءَنَا وَأَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ ٱللَّهِ عَلَى ٱلْكَـٰذِبِينَ ﴿٦١﴾
தூதரே! உம்மிடம் ஈசாவைக்குறித்து சரியான அறிவு வந்தபின்னரும் அவர் அல்லாஹ்வின் அடியார் இல்லை என்று உம்மிடம் வாதம் செய்யும் நஜ்ரான் பிரதேசத்தைச் சேர்ந்த கிறித்தவர்களிடம் நீர் கூறும்: “வாருங்கள், எங்களின் பிள்ளைகளையும் உங்களின் பிள்ளைகளையும், எங்களின் பெண்களையும் உங்களின் பெண்களையும், எங்களின் உயிர்களையும் உங்களின் உயிர்களையும் அழைத்து, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எங்களிலும் உங்களிலுமுள்ள பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று அவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வோம்.