×

آل عمران

வசனம் 200

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٢٠٠﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மார்க்கக் கடமைகளிலும் உங்களுக்கு உலகில் நிகழும் துன்பங்களிலும் பொறுமையாக இருங்கள். பொறுமையில் நிராகரிப்பாளர்களை மிகைத்துவிடுங்கள். அவர்கள் உங்களைவிட பொறுமைமிக்கவர்களாக ஆகிவிடக்கூடாது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தில் நுழைந்து உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.