×

آل عمران

வசனம் 199

அல்-முக்தஸர்

وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَـٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ ثَمَنًا قَلِيلًا ۗ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ ﴿١٩٩﴾

வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின்மீதும் அவன் உங்களுக்கு இறக்கிய சத்தியத்தின்மீதும் நேர்வழியின் மீதும் நம்பிக்கைகொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேதங்களில் தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடையே அவர்கள் பாகுபாடு காட்டுவதில்லை. அவனிடம் உள்ளவற்றின்மீது ஆசைகொண்டவர்களாக அவனுக்கே முற்றிலும் அடிபணிகிறார்கள். அல்லாஹ்வின் வசனங்களை அற்ப ஆதாயத்திற்காக அவர்கள் விற்றுவிடுவதில்லை. இந்த பண்புகளை உடையவர்கள் தங்கள் இறைவனிடம் மகத்தான கூலியைப் பெறுவார்கள். அல்லாஹ் அடியார்களின் செயல்களுக்கு விரைவாக கணக்குத் தீர்க்கக்கூடியவன். அவைகளுக்கு விரைவாக கூலியும் வழங்குபவன்.