×

آل عمران

வசனம் 184

அல்-முக்தஸர்

فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَآءُو بِٱلْبَيِّنَـٰتِ وَٱلزُّبُرِ وَٱلْكِتَـٰبِ ٱلْمُنِيرِ ﴿١٨٤﴾

தூதரே! அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால் அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான். உமக்கு முன்னால் ஏராளமான தூதர்கள் இவ்வாறே பொய்யர் என்று தூற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தெளிவான ஆதாரங்களையும், அறிவுரைகளையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய வேதங்களையும் சட்ட திட்டங்களை உள்ளடக்கிய நேர்வழிகாட்டக்கூடிய வேதத்தையும் கொண்டு வந்தார்கள்.