அல்-முக்தஸர்
ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ ٱلنَّارُ ۗ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَـٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿١٨٣﴾
“அல்லாஹ் எங்கள் வேதங்களில் எங்களின் தூதர்களின்மூலம் எங்களிடம் ஒரு கட்டளையிட்டுள்ளான். அது எங்களிடம் வருகின்ற எந்த தூதரானாலும் அவர் அல்லாஹ்வுக்காக வழங்கும் தர்மத்தை வானத்திலிருந்து வரும் நெருப்பு பொசுக்காத வரை நாம் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதாகும்” என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டமாகவும் பொய்யாகவும் கூறுகிறார்கள். இக்கட்டளை அல்லாஹ் கூறியது, தூதர்களின் உண்மைக்கு ஆதாரம் நெருப்பு எரிக்கும் தர்மம் என்பவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறிய பொய்களாகும். எனவேதான் அல்லாஹ் தன் தூதர் முஹம்மதிடம் பின்வருமாறு அவர்களிடம் கேட்குமாறு கட்டளையிடுகிறான்: “எனக்கு முன்னால் வந்த பல தூதர்கள் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் நீங்கள் கூறும், வானத்திலிருந்து நெருப்பு பொசுக்கக்கூடிய ஒரு பலிப்பிராணியையும் கொண்டு வந்தார்களே! நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் பொய்ப்பித்தீர்கள்? ஏன் கொலை செய்தீர்கள்?