×

آل عمران

வசனம் 165

அல்-முக்தஸர்

أَوَلَمَّآ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَـٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٦٥﴾

நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு தோல்வி ஏற்பட்டு உங்களில் சிலர் இறந்ததனால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் போது - பத்ருப் போரில் உங்களின் எதிரிகளில் இறந்தவர்களும் கைதிகளும் இருமடங்காகும். -: “நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தும் அல்லாஹ்வின் தூதர் எங்களிடையே இருந்தும் எங்களுக்கு எவ்வாறு துன்பம் ஏற்பட்டது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். தூதரே! நீர் கூறுவீராக: இது உங்களால் ஏற்பட்ட துன்பங்களேயாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள், தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். தான் நாடியவர்களுக்கு அவன் உதவி செய்கிறான். தான் நாடியவர்களை கைவிட்டுவிடுகிறான்.