×

آل عمران

வசனம் 164

அல்-முக்தஸர்

لَقَدْ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ ﴿١٦٤﴾

அல்லாஹ் நம்பிக்கையாளர்கள்மீது அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி அருள் புரிந்திருக்கிறான். அவர் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஷிர்க்கிலிருந்தும் தீய குணங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்துகின்றார். குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குப் போதிக்கின்றார். இந்த தூதர் வருவதற்கு முன்னால் அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.