அல்-முக்தஸர்
أَوْ كَظُلُمَـٰتٍ فِى بَحْرٍ لُّجِّىٍّ يَغْشَىٰهُ مَوْجٌ مِّن فَوْقِهِۦ مَوْجٌ مِّن فَوْقِهِۦ سَحَابٌ ۚ ظُلُمَـٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَآ أَخْرَجَ يَدَهُۥ لَمْ يَكَدْ يَرَىٰهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُۥ نُورًا فَمَا لَهُۥ مِن نُّورٍ ﴿٤٠﴾
அல்லது அவனுடைய செயல்கள் ஆழ்கடலின் இருள்களைப் போன்றதாகும். அதற்கு மேல் அலை இருக்கிறது. அதற்கு மேல் அடுக்கடுக்காக அலைகள் இருக்கின்றன. அதற்கு மேல் மேகம் வழிகாட்டும் நட்சத்திரங்களை மறைக்கிறது. அடுக்கடுக்கான இருள்கள். ஒருவன் இந்த இருள்களில் தன் கையை வெளியே நீட்டினால் காரிருளின் காரணமாக அவனால் எதையும் பார்க்க முடியாது. இவ்வாறே நிராகரிப்பாளனை அறியாமை, சந்தேகம், தடுமாற்றம், உள்ளத்தில் முத்திரை போன்ற இருள்கள் அடுக்கடுக்காக சூழ்ந்துள்ளன. அல்லாஹ் யாருக்கு வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் தன் வேதத்தைப் பற்றிய அறிவையும் வழங்கவில்லையோ அவருக்கு நேர்வழியை பெற வழிகாட்டக்கூடியவனோ, பிரகாசம் பெறத்தக்க வேதமோ கிடையாது.