×

النور

வசனம் 39

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَعْمَـٰلُهُمْ كَسَرَابٍۭ بِقِيعَةٍ يَحْسَبُهُ ٱلظَّمْـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمْ يَجِدْهُ شَيْـًٔا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥ ۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ ﴿٣٩﴾

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் செய்த செயல்களுக்கு எவ்வித கூலியும் இல்லை. அவை பூமியின் சமதரையில் காணப்படும் கானல் நீரைப் போன்றதாகும். தாகித்தவன் அதனை தண்ணீர் என்று எண்ணுகிறான். அதன் அருகில் வரும்போது எதையும் அவன் காண மாட்டான். இவ்வாறே நிராகரிப்பாளன் தான் செய்த செயல்கள் தனக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் இறந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டால் எதையும் அவன் பெற மாட்டான். தனக்கு முன்னால் அல்லாஹ்வையே காண்பான். அல்லாஹ் அவன் செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி வழங்கிடுவான். அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன்.