×

الحج

வசனம் 56

அல்-முக்தஸர்

ٱلْمُلْكُ يَوْمَئِذٍ لِّلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿٥٦﴾

அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களை வந்தடையும் அந்த மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அங்கு அதில் அவனோடு சர்ச்சைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவன் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அளிப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான பாக்கிய மிக்க சுவனங்கள் எனும் மகத்தான கூலி உண்டு.