அல்-முக்தஸர்
وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى مِرْيَةٍ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ ﴿٥٥﴾
அல்லாஹ்வை நிராகரித்து தூதரைப் பொய்யெரெனக் கூறியவர்கள், மறுமை நாள் தங்களிடம் திடீரென வரும் வரை அல்லது நன்மையோ, கருணையோ அற்ற வேதனையுடைய நாள் வரும்வரை உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் மீது சந்தேகத்திலேயே தொடர்ந்து நிலைத்திருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அது கியாமத் நாளாகும்.