அல்-முக்தஸர்
ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَـٰرِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُوا۟ رَبُّنَا ٱللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَٰمِعُ وَبِيَعٌ وَصَلَوَٰتٌ وَمَسَـٰجِدُ يُذْكَرُ فِيهَا ٱسْمُ ٱللَّهِ كَثِيرًا ۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ ﴿٤٠﴾
“எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறியதற்காகவே அவர்கள் நிராகரிப்பாளர்களால் தங்களின் வீடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் தூதர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதைக் கடமையாக்காவிட்டால் அந்த எதிரிகள் வணக்கஸ்தலங்களின் மீது வரம்புமீறியிருப்பார்கள். துறவிகளின் மடங்களையும் கிருஸ்தவர்களின் தேவாலயங்களையும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் தொழுகைக்காக தயார் செய்யப்பட்ட அவர்களின் பள்ளிவாயில்களையும் தகர்த்திருப்பார்கள். தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவிபுரிபவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவிபுரிவான். நிச்சயமாக தன் மார்க்கத்திற்கு உதவிபுரிபவர்களுக்கு உதவிபுரிய அல்லாஹ் சக்தியுடையவன். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது.