அல்-முக்தஸர்
أُذِنَ لِلَّذِينَ يُقَـٰتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا۟ ۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ ﴿٣٩﴾
தமது எதிரிகளினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனால் தம்முடன் போர்தொடுக்கும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதியளித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் போரில்லாமல் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்ய ஆற்றலுடையவன்தான். ஆயினும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதைக்கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதிப்பதற்கு அவனது ஞானம் தீர்மானித்துள்ளது.