×

الحج

வசனம் 30

அல்-முக்தஸர்

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَـٰتِ ٱللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُۥ عِندَ رَبِّهِۦ ۗ وَأُحِلَّتْ لَكُمُ ٱلْأَنْعَـٰمُ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ ۖ فَٱجْتَنِبُوا۟ ٱلرِّجْسَ مِنَ ٱلْأَوْثَـٰنِ وَٱجْتَنِبُوا۟ قَوْلَ ٱلزُّورِ ﴿٣٠﴾

உங்களுக்குக் கட்டளையிப்பட்ட -தலைமுடியை மழித்தல், நகங்களை வெட்டுதல், அழுக்குகளைக் களைதல், நேர்ச்சைகளை நிறைவேற்றுதல், இறை இல்லத்தைத் தவாஃப் செய்தல் ஆகியவை- அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியவைகளாகும். அவன் உங்கள் மீது கடமையாக்கியதை கண்ணியப்படுத்துங்கள். யார் இஹ்ராம் அணிந்த நிலையில் அல்லாஹ் விதித்த வரம்புகளில் வீழ்ந்து விடக்கூடாது, தடுத்தவற்றை ஆகுமாக்கக் கூடாது என்ற கண்ணியத்தினால் அவன் தவிர்ந்து கொள்ளுமாறு ஏவிய விடயங்களை விட்டும் தவிர்ந்து இருக்கின்றாரோ அது அவரது இறைவனிடத்தில் அவருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்ததாகும். -மனிதர்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹாமியா, பஹீரா, வஸீலா ஆகிய எந்த ஒன்றையும் அவன் தடை செய்யவில்லை. அவற்றில் குர்ஆனில் காணப்படும் இறந்தவை, இரத்தம், அது போன்றவற்றை மாத்திரமே தடைசெய்துள்ளான். சிலைகள் என்னும் அசுத்தத்தை விட்டும், அல்லாஹ்வின் மீதும் அவனது படைப்புகள் மீதும் அசத்தியமாக பொய் கூறுவதை விட்டும் விலகியிருங்கள்.