×

الحج

வசனம் 29

அல்-முக்தஸர்

ثُمَّ لْيَقْضُوا۟ تَفَثَهُمْ وَلْيُوفُوا۟ نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا۟ بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ ﴿٢٩﴾

பின்னர் அவர்கள் மீதமிருக்கும் ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, தலைமுடியை மழித்து, நகங்களை வெட்டி, இஹ்ராமின் காரணமாக தேங்கியிருக்கும் அழுக்குகளைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியேறட்டும். ஹஜ் அல்லது உம்ரா அல்லது பலிப்பிராணி ஆகியவற்றில் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டதை நிறைவேற்றிவிடட்டும். அநியாக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த இந்த வீட்டையும் அவர்கள் தவாஃப் இபாளா மூலம் சுற்றி வரட்டும்.