×
الأنبياءவசனம் 79

அல்-முக்தஸர்

فَفَهَّمْنَـٰهَا سُلَيْمَـٰنَ ۚ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًا وَعِلْمًا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ ۚ وَكُنَّا فَـٰعِلِينَ ﴿٧٩﴾

நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம்.