×

الأنبياء

வசனம் 78

அல்-முக்தஸர்

وَدَاوُۥدَ وَسُلَيْمَـٰنَ إِذْ يَحْكُمَانِ فِى ٱلْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ ٱلْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَـٰهِدِينَ ﴿٧٨﴾

தூதரே!- தாவூதையும் அவருடைய மகன் சுலைமானையும் நினைவு கூர்வீராக. அவர்கள் தங்களிடம் வந்த இரு வழக்காளிகளின் விஷயத்தில் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்காளிகளில் ஒருவருடைய ஆடுகள் இரவில் மற்றவரின்பயிரில் புகுந்து அதனை நாசமாக்கிவிட்டன. தாவூதும் சுலைமானும் தீர்ப்பளிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களின் தீர்ப்பில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை.