அல்-முக்தஸர்
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ ﴿٤١﴾
தூதரே!- உம் சமூகம் உம்மை பரிகாசம் செய்தால் நீர் ஒன்றும் அதற்குப் புதுமையானவர் அல்ல. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்களை வேதனை சூழ்ந்துகொண்டது. அதனைக் கொண்டு அவர்களது தூதர்கள் அவர்களை அச்சுறுத்திய போது அதனை அவர்கள் இவ்வுலகில் பரிகாசம் செய்துகொண்டிருந்தனர்.