அல்-முக்தஸர்
بَلْ تَأْتِيهِم بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمْ يُنظَرُونَ ﴿٤٠﴾
நெருப்பைக்கொண்டு செய்யப்படும் இந்த வேதனை அவர்கள் அறிந்த நிலையில் அவர்களிடம் வராது. மாறாக திடீரென அவர்களிடம் வரும். அவர்கள் அதனைத் தடுக்க சக்திபெறமாட்டார்கள். பாவமன்னிப்புக் கோரி அருளைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.