×

البقرة

வசனம் 97

அல்-முக்தஸர்

قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ ٱللَّهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ ﴿٩٧﴾

தூதரே! வானவர்களில் ஜிப்ரீல் எங்களின் எதிரியாவார் என்று கூறுபவர்களிடம் நீர் கூறுவீராக, அவர்தான் உமது உள்ளத்தில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு குர்ஆனை இறக்கினார். அது தவ்ராத், இன்ஜீல் போன்ற முன்னுள்ள இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது; நன்மையின் பக்கம் வழிகாட்டுகிறது; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் அருட்கொடைகளை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுகிறது. இத்தகைய பண்புடைய ஜிப்ரீலை எதிரிகளாகக் கருதுபவர்கள் வழிகெட்டவர்களாவர்.