×

البقرة

வசனம் 96

அல்-முக்தஸர்

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٍ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۚ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِۦ مِنَ ٱلْعَذَابِ أَن يُعَمَّرَ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ ﴿٩٦﴾

தூதரே! மனிதர்களிலே வாழ்வின் மீது அதிக பேராசையுடையவர்களாக யூதர்களைக் காண்பீர், அது மிகவும் இழிவானதாக இருந்தாலும் சரியே. மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொண்ட வேதக்காரர்களாக அவர்கள் இருந்தும், மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களைக் காட்டிலும் அவர்கள் அதிக பேராசையுடையவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.எவ்வளவு நீண்ட ஆயுளாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைத் தூரமாக்காது. அவன் அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.