அல்-முக்தஸர்
وَقَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَةً ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّهِ عَهْدًا فَلَن يُخْلِفَ ٱللَّهُ عَهْدَهُۥٓ ۖ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٨٠﴾
சில நாட்கள் மாத்திரமே நரகில் நாம் நுழைந்து நரக நெருப்பு எம்மைத் தீண்டும் என அவர்கள் அபாண்டமாகவும் ஆணவத்துடனும் கூறினார்கள், தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: இவ்வாறு நீங்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி பெற்றுள்ளீர்களா? அப்படியென்றால் அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறாக செயல்பட மாட்டான். அல்லது அல்லாஹ்வின்மீது நீங்கள் அறியாத விஷயத்தை அபாண்டமாகவும் பொய்யாகவும் இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?.