×

البقرة

வசனம் 79

அல்-முக்தஸர்

فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَـٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَـٰذَا مِنْ عِندِ ٱللَّهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ ﴿٧٩﴾

தங்களின் கைகளால் ஒரு நூலை எழுதிக்கொண்டு, பிறகு அபாண்டமாக, இது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமாகும் என்று கூறும் இவர்களுக்கு கடுமையான வேதனையும், அழிவும் காத்திருக்கிறது. சத்தியம் மற்றும் நேர்வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இவ்வுலகில் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயம் பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கின்றனர். தங்களின் கைகளால் எழுதிய நூலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வேதம் என்று அல்லாஹ்வின் மீதே பொய் கூறியதற்கும், அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணம், பதவிகளின் காரணமாகவும் அவர்களுக்கு அழிவும் கடுமையான வேதனையும் உண்டு.