அல்-முக்தஸர்
ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ فَهِىَ كَٱلْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ ٱلْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ ٱلْأَنْهَـٰرُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ ٱلْمَآءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿٧٤﴾
இந்த பேரற்புதத்தை கண்ணால் கண்டபின்னரும் உங்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப்போன்று, மாறாக அவற்றைவிடவும் கடினமாகிவிட்டன. ஒரு போதும் அவை தனது நிலையிலிருந்து மாறவேமாட்டாது. பாறைகள்கூட மாற்றம் அடைகின்றன. அவற்றிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. அவற்றுள் சில பிளந்து அவற்றிலிருந்து ஊற்று நீர் பீறிட்டு பூமியில் வழிந்தோடுகின்றது. அதன் மூலம் மனிதர்களும் விலங்குகளும் பயனடைகிறார்கள். அவற்றுள் சில அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் உயரமான மலையிலிருந்து உருண்டுவிடுகின்றன. உங்களின் உள்ளங்களோ இவ்வாறுகூட இல்லை. நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. மாறாக அவன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.