×

البقرة

வசனம் 73

அல்-முக்தஸர்

فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْىِ ٱللَّهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٧٣﴾

அறுக்குமாறு உத்தரவிடப்பட்ட பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடியுங்கள். அல்லாஹ் அவருக்கு உயிர்கொடுத்து, அவர் தன்னைக் கொன்றவரை அறிவிப்பார் என்று நாம் கூறினோம். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர் கொன்றவரை அறிவித்தார். இந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் அறிந்துகொண்டு அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஆற்றலுக்கான சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகின்றான்.