×

البقرة

வசனம் 284

அல்-முக்தஸர்

لِّلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا۟ مَا فِىٓ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ ٱللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٢٨٤﴾

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மாத்திரமே அவற்றைப் படைத்துப் பரிபாளிக்கிறான். நீங்கள் உங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அதற்கேற்பவே அவன் உங்களிடம் விசாரணை செய்வான். அதன் பிறகு தன் அருளால் தான் நாடியவர்களை மன்னிக்கிறான். தன் நீதியால் தான் நாடியவர்களைத் தண்டிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.