×

البقرة

வசனம் 283

அல்-முக்தஸர்

وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا۟ كَاتِبًا فَرِهَـٰنٌ مَّقْبُوضَةٌ ۖ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ ٱلَّذِى ٱؤْتُمِنَ أَمَـٰنَتَهُۥ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ ۗ وَلَا تَكْتُمُوا۟ ٱلشَّهَـٰدَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٌ قَلْبُهُۥ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ﴿٢٨٣﴾

நீங்கள் பயணத்தில் இருந்து கடன் பத்திரத்தை உங்களுக்காக எழுதக்கூடியவரைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் கடனாளி கடனளிப்பவருக்கு அடமானமாக எதையாவது கொடுக்கட்டும். கடனை நிறைவேற்றும் வரை அவருக்கு அது உத்தரவாதமாக அமையும். நீங்கள் ஒருவர் மற்றவரை நம்பினால் எழுதவோ சாட்சியோ அடமானமோ தேவையில்லை. அச்சமயத்தில் கடனைப் பெற்றவரின் பொறுப்பில் அமானிதமாக அது இருக்கும். அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவர் மீது கடமையாகிவிடுகிறது. இந்த அமானிதத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதிலிருந்து எதையும் மறுத்துவிட வேண்டாம். அவ்வாறு மறுத்தால் சாட்சியாளர்கள் சாட்சியத்தை மறைக்காது அதனை நிறைவேற்றிவிட வேண்டும். சாட்சியை மறைப்பவரின் உள்ளம் பாவியின் உள்ளமாகும். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.