×

البقرة

வசனம் 266

அல்-முக்தஸர்

أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلْكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعْصَارٌ فِيهِ نَارٌ فَٱحْتَرَقَتْ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ ﴿٢٦٦﴾

நீங்கள் பின்வரும் விஷயத்தை விரும்புவீர்களா?: உங்களுக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் அடங்கிய ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் நடுவில் சுவையான நீர் ஓடுகிறது. அதில் எல்லா வகையான நல்ல கனிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களுக்கு வயதாகிவிடுகிறது. நீங்கள் வேலைசெய்ய முடியாத கிழவராகி விடுகிறீர்கள். இந்நிலையில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாத பலவீனமான சிறுகுழந்தைகளும் இருக்கின்றனர். உங்களின் முதுமை, குழந்தைகளின் பலவீனம் ஆகிய காரணங்களினால் அதன்பால் அதிக தேவையுடையவர்களாக நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நெருப்பை உள்ளடக்கிய கடுமையான காற்று அந்தத் தோட்டத்தைத் தாக்கி அனைத்தையும் அழித்துவிடுகிறது. மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக தன் செல்வத்தை செலவுசெய்பவனின் நிலையும் இவ்வாறுதான் அமையும். நன்மையின் பக்கம் மிகவும் தேவையுள்ள மறுமைநாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த நன்மையையும் பெறமாட்டான். இவ்வாறு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடியவற்றை நீங்கள் சிந்திக்கும்பொருட்டு தெளிவுபடுத்துகிறான்.