×

البقرة

வசனம் 265

அல்-முக்தஸர்

وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٢٦٥﴾

அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் அவனுடைய வாக்குறுதியின் மீது திருப்தியடைந்தவர்களாகவும் வெறுப்பின்றி தங்கள் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் உயரமான வளமுள்ள இடத்தில் இருக்கும் தோட்டத்தைப் போன்றதாகும். அது நல்ல மழையைப் பெற்றதால் பலமடங்கு விளைச்சலைத் தந்தது. அது வளமான நிலம் என்பதால் நல்ல மழையைப் பெறாவிட்டாலும் அங்கு பெய்யக்கூடிய சிறுதூறலே அதற்குப் போதுமானதாகும். இவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செலவு செய்பவர்களின் தர்மங்களை அவன் ஏற்றுக்கொள்கிறான். அது குறைவாக இருந்தாலும் அதற்கு பன்மடங்கு கூலி வழங்குகிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உளத்தூய்மையுடையவர்கள் முகஸ்துதியுடையோர் ஆகிய எவரது நிலமையும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.