×

البقرة

வசனம் 257

அல்-முக்தஸர்

ٱللَّهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ ۖ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْلِيَآؤُهُمُ ٱلطَّـٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَـٰتِ ۗ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ ﴿٢٥٧﴾

தன்மீது நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கு நன்மை செய்வதற்கான பாக்கியம் அளித்து, உதவியும் புரிகிறான். நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அறிவு மற்றும் ஈமானிய ஒளியின்பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இணையாக்கப்பட்டவர்களும் சிலைகளுமே பொறுப்பாளர்களாவர். அவர்கள் நிராகரிப்பை அலங்கரித்துக் காட்டி இவர்களை அறிவு மற்றும் ஈமானிய ஒளியிலிருந்து வெளியேற்றி அறியாமை மற்றும் நிராகரிப்பின் இருள்களுக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.