×

البقرة

வசனம் 256

அல்-முக்தஸர்

لَآ إِكْرَاهَ فِى ٱلدِّينِ ۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشْدُ مِنَ ٱلْغَىِّ ۚ فَمَن يَكْفُرْ بِٱلطَّـٰغُوتِ وَيُؤْمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسْتَمْسَكَ بِٱلْعُرْوَةِ ٱلْوُثْقَىٰ لَا ٱنفِصَامَ لَهَا ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٥٦﴾

இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவதற்கு யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அது தெளிவான சத்தியமாகும். எனவே எவரையும் வற்புறுத்தி அதில் நுழைவிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்வழியிலிருந்து வழிகேடு தெளிவாகிவிட்டது. எவர் அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, அவற்றிலிருந்து முழுமையாக நீங்கி அல்லாஹ் ஒருவன்மீது நம்பிக்கைகொண்டாரோ அவர் மறுமைநாளில் வெற்றியைத் தரக்கூடிய, என்றும் அறுபடாத மார்க்கத்தின் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலிவழங்குவான்.