அல்-முக்தஸர்
حَـٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَـٰنِتِينَ ﴿٢٣٨﴾
அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகைகளை முழுமையாக பேணிக்கொள்ளுங்கள். நடுத்தொழுகையான அசர் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். உங்களுடைய தொழுகையில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக, அவனை அஞ்சியவர்களாக நில்லுங்கள்.