×

البقرة

வசனம் 237

அல்-முக்தஸர்

وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٢٣٧﴾

நீங்கள் மணக்கொடையை நிர்ணயித்து மணமுடித்துக் கொண்ட பெண்களுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னரே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் நிர்ணயித்துக்கொண்ட மணக்கொடையில் பாதியை வழங்குவது உங்கள்மீது கடமையாகும். விரும்பினால் அந்தப் பெண்கள் -தெளிவுள்ளவர்களாக இருந்தால்- விட்டுக்கொடுத்துவிடலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட முழுத்தொகையையும் ஆண்கள் வழங்கிவிடலாம். நீங்கள் உங்களிடையே உரிமைகளில் விட்டுக்கொடுத்துக்கொள்வதுதான் இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானது. மக்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதை, உரிமைகளில் விட்டுக்கொடுப்பதை விட்டுவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதற்காக நற்காரியங்களில் முழுமூச்சுடன் செயல்படுங்கள்.