அல்-முக்தஸர்
لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ ۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢٢٦﴾
"மனைவியருடன் உடலுறவு கொள்ள மாட்டேன்" என்று சத்தியம் செய்பவர்களுக்கு அவர்கள் சத்தியம் செய்ததிலிருந்து நான்கு மாதம்வரை அவகாசம் உண்டு. அவர்கள் இந்த காலத்திற்குள் சத்தியத்தை முறித்து உடலுறவு கொண்டுவிட்டால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட தவறுகளை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். அதனால்தான் பரிகாரத்தின் மூலம் அந்த சத்தியத்திலிருந்து வெளியேறும் வழியைக் காட்டியுள்ளான்.