×

البقرة

வசனம் 225

அல்-முக்தஸர்

لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ ﴿٢٢٥﴾

நீங்கள் நோக்கமின்றி வீணாகச் செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்கமாட்டான். உதாரணமாக: "அல்லாஹ்வின்மீது சத்தியமாக"என்று பேச்சோடு பேச்சாக கூறுவது. இதற்காக நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் உங்களைத் தண்டிக்கவும் மாட்டான். ஆனால் நீங்கள் சத்தியம் செய்யும் நோக்குடன் செய்யும் சத்தியங்களுக்கு அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவனாக இருக்கின்றான். உங்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.