×

البقرة

வசனம் 195

அல்-முக்தஸர்

وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوٓا۟ ۛ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ ﴿١٩٥﴾

ஜிஹாத் மற்றும் அதுபோன்ற இறைவழிபாட்டில் செல்வங்களை செலவு செய்யுங்கள். ஜிஹாதையும் அவனுடைய பாதையில் செலவழிப்பதையும் விட்டுவிட்டோ உங்களின் அழிவுக்குக் காரணமானவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமோ உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களின் வணக்க வழிபாடு, கொடுக்கல் வாங்கல்கள், பண்புகள் ஆகியவற்றில் சிறந்தமுறையில் செயலாற்றுங்கள். எல்லா விவகாரங்களிலும் சிறந்தமுறையில் செயல்படுபவர்களேயே அல்லாஹ் நேசிக்கின்றான். அவன் அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறான்; நேரான வழியைக் காட்டுகிறான்.