அல்-முக்தஸர்
ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَـٰتُ قِصَاصٌ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ ﴿١٩٤﴾
அல்லாஹ் உங்களுக்கு ஹரமில் நுழைவதற்கு அனுமதியளித்த ஏழாம் ஆண்டின் புனிதமான மாதம் இணைவைப்பாளர்கள் உங்களைத் தடுத்த ஆறாம் ஆண்டின் புனிதமான மாதத்திற்கு பகரமாகும். புனிதங்களிலும் - புனித மாதம், புனித நகரம், இஹ்ராம் போன்றவை - வரம்பு மீறியவர்களிடமிருந்து பழிவாங்கப்படுகிறது. யாரேனும் இவற்றில் உங்கள்மீது வரம்பு மீறினால் அவர்கள் உங்களுடன் நடந்துகொண்டவாறே நீங்களும் நடந்துகொள்ளுங்கள். வரம்புமீறி விடாதீர்கள். அல்லாஹ் அவன் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றில் வரம்புமீறுவதில் அவனை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு உதவுபவனாகவும், ஆதரவளிப்பவனாகவும் இருக்கின்றான்.