×

البقرة

வசனம் 179

அல்-முக்தஸர்

وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٧٩﴾

அல்லாஹ் உங்களுக்கு விதித்த இந்த பழிவாங்குதலில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது. அதனால் உங்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கு மத்தியில் நிகழும் அநியாயங்கள் தடுக்கப்படும். அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, அவனது கட்டளையின்படி செயல்படும், அவனை அஞ்சும் அறிவாளிகள் இந்த விஷயத்தை உணர்ந்துகொள்வார்கள்.