×

البقرة

வசனம் 178

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ۖ ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌ فَٱتِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَـٰنٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ ﴿١٧٨﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! வேண்டுமென்றே, அநியாயமாக மற்றவர்களை கொலை செய்யக்கூடியவர்கள் விஷயத்தில் கொலையாளியின் குற்றத்திற்குப் பகரமாக அவனும் கொல்லப்பட வேண்டும் என்று உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவன் சுதந்திரமானவனுக்குப் பகரமாக கொல்லப்படுவான், அடிமை அடிமைக்குப் பகரமாக கொல்லப்படுவான், பெண் பெண்ணுக்குப் பகரமாக கொல்லப்படுவாள். கொலைசெய்யப்பட்டவர் இறப்பதற்கு முன்னால் கொன்றவனை மன்னித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டவரின் பொறுப்பாளர் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு அவனை மன்னித்துவிட்டால் - மன்னிப்பவர் ஈட்டுத் தொகையைப் பெறுவதில் சொல்லிக்காட்டாது நோவினை செய்யாது நல்லமுறையில் நடந்துகொள்ளட்டும். கொன்றவனும் தாமதமின்றி சிறந்தமுறையில் ஈட்டுத்தொகையை அளித்துவிடட்டும். இந்த மன்னிப்பும், ஈட்டுத்தொகையும் இறைவன் உங்களுக்கு அளித்த சலுகையும் இந்த சமூகத்தின்மீது பொழிந்து கருணையுமாகும். மன்னித்து, ஈட்டுத்தொகையும் பெற்றுவிட்டு கொன்றவன்மீது யாரேனும் வரம்புமீறினால் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வேதனைமிக்க தண்டனை உண்டு.