அல்-முக்தஸர்
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٧٣﴾
அல்லாஹ் உங்கள்மீது பின்வரும் உணவுப்பொருட்களைத் தடைசெய்துள்ளான்: "இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கூறி அறுக்கப்பட்டது."யாரேனும் நிர்பந்தத்தினால் - விரும்பாமலும், தேவையான அளவைத் தாண்டாமலும் - இவ்வகையான பொருள்களை உண்டுவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நிர்ப்பந்தமான சமயங்களில் தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை மன்னித்துவிடுவதும் அவனுடைய கருணையின் வெளிப்பாடுதான்.