×

البقرة

வசனம் 172

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿١٧٢﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, ஆகுமாக்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நன்றி செலுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் இருந்தால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றை விட்டு விலகியிருப்பதும் அவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ளவைதாம்.