×

البقرة

வசனம் 142

அல்-முக்தஸர்

سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿١٤٢﴾

யூதர்களில் அறிவீனர்களும் அவர்களைப் போன்று இருக்கும் நயவஞ்சகர்களும், ஏற்கனவே முஸ்லிம்கள் முன்னோக்கிக்கொண்டிருந்த பைதுல் மக்திஸ் திசையை விட்டுத் திருப்பியது எது? என்று கேட்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக, கிழக்கு, மேற்கு மற்றும் மற்ற திசைகள் அனைத்தின் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களை தான் விரும்பிய திசையின் பக்கம் செலுத்துகிறான். தான் நாடிய அடியார்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.