அல்-முக்தஸர்
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٤١﴾
அது உங்களுக்கு முன்னர் கடந்துபோன சமூகம். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களின் பக்கம் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த செயல்கள் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவர் செய்த பாவத்தினால் தண்டிக்கப்பட மாட்டார். அவர் செய்த செயல்களே அவருக்குப் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தம்முடைய செயல்களுக்கேற்பத்தான் கூலி வழங்கப்படுவார்கள்.