×

الكهف

வசனம் 20

அல்-முக்தஸர்

إِنَّهُمْ إِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِى مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوٓا۟ إِذًا أَبَدًا ﴿٢٠﴾

உங்களின் சமூகத்தினர் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து உங்களைக் கண்டுபிடித்தால் கல்லால் எறிந்து உங்களைக் கொன்றுவிடுவார்கள் அல்லது உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்து சத்திய மார்க்கத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு முன்னர் இருந்த அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் உங்களைத் திருப்பி விடுவார்கள். நீங்கள் அதனை மீண்டும் ஏற்றுக்கொண்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாறாக அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய சத்தியத்தை விட்டுவிட்டு அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் திரும்பியதனால் ஈருலகிலும் பெரும் இழப்பிற்குள்ளாகி விடுவீர்கள்.