×

الكهف

வசனம் 19

அல்-முக்தஸர்

وَكَذَٰلِكَ بَعَثْنَـٰهُمْ لِيَتَسَآءَلُوا۟ بَيْنَهُمْ ۚ قَالَ قَآئِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ۖ قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۚ قَالُوا۟ رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَٱبْعَثُوٓا۟ أَحَدَكُم بِوَرِقِكُمْ هَـٰذِهِۦٓ إِلَى ٱلْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَآ أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا ﴿١٩﴾

நாம் குறிப்பிட்ட வியக்கத்தக்க நம்முடைய வல்லமைகளை அவர்கள் விடயத்தில் நிகழ்த்தியது போன்று நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்கள் ஒருவருக்கொருவர் தூக்கத்தில் கழித்த காலத்தைப் பற்றி விசாரிப்பதற்காக. அவர்களில் சிலர் கூறினார்கள்: “நாம் ஒரு நாளோ அதற்கு குறைவான நாளோ தூங்கியவாறு கழித்திருப்போம்.” அவர்கள் தங்கியிருந்த காலத்தை சரியாக கணிக்க முடியாத சிலர் கூறினார்கள்: “நீங்கள் தூங்கியவாறு தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவனே நன்கறிந்தவன். எனவே இதுகுறித்த விஷயத்தை அவனிடமே ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குச் சம்பந்தமுள்ளவற்றில் ஈடுபடுங்கள். இந்த வெள்ளி நாணயங்களைக்கொண்டு நம்முடைய நமது நகரத்திற்கு உங்களில் ஒருவரை அனுப்புங்கள். அவர், தூய்மையான, நல்ல உழைப்புடையவரிடமுள்ள உணவைப் பார்த்து வாங்கிவரட்டும். அவர் அங்கு செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளட்டும். விவேகமாக நடந்து கொள்ளட்டும். எவரும் உங்களின் இடத்தை அறியவிடவேண்டாம். ஏனெனில் அதனால் பாரிய தீங்குகள் ஏற்படும்.